அதிகரித்து வரும் காற்று மாசுபாடு..குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனை ஏற்படும் அபாயம் !

x

சிலி நாட்டின், தலைநகரமான சான் டியேகோ கடும் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர் காலங்களில் ஏற்பட்ட கால நிலை மாற்றங்களால், கண்களுக்கு புலப்படாத பல்வேறு திடம் மற்றும் நீரினாலான துகள்கள் காற்றில் இருப்பதால், மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக காலநிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், காற்று மாசுபாட்டினால் அதிகளவிலான குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்