சந்தையில் விதை உயர்வு... மக்கள் குறைவு... | Krishnagiri | Thanthi TV

x

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையானது தமிழகத்தின் இரண்டாவது பெரிய வார சந்தை ஆகும். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. முன்பெல்லாம் ரூ.100 முதல் ரூ.200 கொண்டு சென்றாலே ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கலாம் என்ற நிலையில் தற்பொழுது அன்றாட தேவைக்கு கூடவாங்க முடியாமல் பொதுமக்கள் விழி பிதுங்கியுள்ளனர். இதனால் பொதுமக்கள் யாரும் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வராததால் இன்று நடந்த போச்சம்பள்ளி வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. வியாபாரிகளும் ஏமாற்றதுடன் திரும்பி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்