பத்திரப்பதிவு சேவைக்கட்டண உயர்வு இன்றுமுதல் அமல்...
பத்திரப் பதிவுத் துறை சேவைக் கட்டணங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல் இருந்த நிலையில்,இன்றுமுதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.அதன்படி, 20 இனங்களுக்கான கட்டணங்கள் மற்றும் சில ஆவணப் பதிவுகளுக்கான,பதிவு மற்றும் முத்திரைக் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.ரசீது ஆவணப் பதிவுக் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும்,குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மென்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு,அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.அதிகபட்ச முத்திரைத் தீர்வை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரமாகவும்,தனி மனை பதிவுக் கட்டணம் 200 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும் மாற்றப்பட்டுள்ளது.மேலும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு,பதிவுக் கட்டணம் 10,000 என்று இருந்த நிலையில், சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றப்பட்டுள்ளது.பத்திரப்பதிவு சேவைக்கட்டண உயர்வு இன்றுமுதல் அமல்