ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம்... கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பா?

x
  • கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே எலத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்த சம்பவத்தில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், டெல்லி அருகே நொய்டா பகுதியை சேர்ந்த ஷாருக் சைஃபி என்பவரை கைது செய்தனர்.
  • இதில், சிறையில் அடைக்கப்பட்ட ஷாருக் சைஃபியை போலீஸ் காவலில் எடுத்துள்ள போலீசார், கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், கேரள ரயிலில் தீ வைத்த சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • தொடர்ந்து கேரள ரயில் விபத்து சம்பவத்தின் போது ஷாருக் சைஃபியின் நடவடிக்கைகளை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • தொடர்ந்து என்.ஐ.ஏ மற்றும் மத்திய உளவுத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் ஷாருக் சைஃபியிடம் ரகசியமாக விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்