போலீஸ் பூத் அருகே துணிகர சம்பவம்..- பூட்டை உடைத்த களைப்பில் ஐஸ், ஜூஸ்-ஐ அபேஸ் செய்த கள்வர்கள்

x

சென்னை அடுத்த ஆவடி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெறுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆவடி சிக்னல் போலீஸ் பூத் அருகே, பால் கடைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், ஜூஸ் மற்றும் ஐஸ் கிரீமை எடுத்து சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காந்தி நகரில் உள்ள செல்போன் கடை, எலக்ட்ரிக் கடைகளின் பூட்டை உடைத்த நபர்கள், செல்போன், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இந்த தொடர் கொள்ளை சம்பவத்தால், வணிகர்கள், பொதுமக்கள் மத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்