சென்னையில் நடுரோட்டில் "விக்ரம்" பட நடிகருக்கு நேர்ந்த பகீர் சம்பவம்

x

சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில், சாலையோரம் நின்று கொண்டிருந்த நடிகரிடம் மர்ம நபர்கள் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

அபியும் நானும், விக்ரம், ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இளங்கோ குமரவேல், அசோக் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர், நேற்றிரவு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு, வீடு திரும்புவதற்காக, அடையாறு ஐயப்பன் கோவில் அருகே வாடகை கார் புக் செய்து கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவருடையை கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, குமரவேல் அளித்த புகாரின்பேரில், பட்டினம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்