மதுகுடிக்க பணம் கேட்டு இளைஞரை கல்லால் அடித்துக் கொன்ற கும்பல்... அதிர்ந்து போன அப்பகுதி மக்கள்

x

சென்னை ஐசிஎப் பகுதியில், இளைஞர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. திருமலை நகரில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ICF போலீசாருக்கு தகவல் வந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இளைஞரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் மணிகண்டன் என்பதும், வேலை முடித்துவிட்டு நள்ளிரவு வீட்டிற்கு திரும்பியபோது, வரும் வழியில் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடித்துக் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்