விடாமல் கொட்டித்தீர்த்த கனமழை... மழைநீரில் மிதக்கும் ஊட்டி - கடும் அவதியில் வாகன ஓட்டிகள்

x

உதகையில் கொட்டி தீர்த்த கனமழையால் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியது. அதேபோல் மத்திய பேரு நிலையம் அருகே படகு இல்லம் செல்லும் சாலையிலும் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் தத்தளித்து சென்ற நிலையில் சுற்றுலா வாகனம் தண்ணீரில் சிக்கியது.உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இன்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. நகரில் மத்திய பேருந்து நிலையம், சேரிங் கிராஸ், தலைகுந்தா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் மழை நீர் தேங்கி குளம் போல் நின்றது. இதனால் மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

தேங்கியிருந்த மழை நீரில் நடந்து சென்ற பொதுமக்கள் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு சிரமத்துடன் சென்றனர். அதேபோல் கோடப்பமந்து கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் மத்திய பேருந்து நிலையம் அருகே படகு இல்லம் செல்லும் சாலையில் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் நீரில் தத்தளித்து சென்றன. அப்போது அந்த வழியாக வந்த மேக்ஸி கேப் வாகனம் தண்ணீரில் சிக்கிக் கொண்டு பழுதாகி நின்றது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக மேக்சி கேப் வாகனம் தண்ணீரிலேயே நின்றது. நோயாளியுடன் வந்த 108 ஆம்புலன்ஸ் அந்த வழியே வந்து சிக்கிக்கொண்டது.பின்னர் ஓட்டுநரின் சாதுரிய்த்தால் நீரில் சிச்காமல் மாற்று பாதையில் சென்றது. அதேபோல் ரயில் நிலைய காவல் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இந்த மழையினால் பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்தனர். படகு இல்லம் செல்லும் சாலையில் தேங்கி நின்ற மழை நீரால் சுற்றுலா பயணிகள் படகு இல்லம் செல்ல முடியாமல் தவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்