குஜராத் நிலநடுக்கம் நினைவிடம் திறப்பு - பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

x

குஜராத் நிலநடுக்கம் நினைவிடம் திறப்பு - பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு


குஜராத் நிலநடுக்கம் குறித்த நினைவிடம் திறப்பதற்கு வந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் காத்திருந்த மக்கள் தேசியக்கொடியை அசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குஜராத்தில் 2001ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட போது, 13 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பேரழிவுக்கு பிறகு குஜராத் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்தோரின் நினைவாக புஜ் பகுதியில் 470 ஏக்கர் பரப்பளவில் ஸ்மிருதி வன நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக நினைவிடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் காத்திருந்த மக்கள் கைகளை அசைத்து உற்சாக வரவேற்பு அள்த்தனர்.


Next Story

மேலும் செய்திகள்