எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.? | School Leave | Tn Rainfall

x

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.?

மழை காரணமாக சென்னை மற்றும் டெல்டா பகுதி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி தாலூகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் தாலூகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதே போல், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று விடுமுறை அறிவிப்பு எதுவும் இல்லை


Next Story

மேலும் செய்திகள்