வேலூர் அருகே ராஜாக்கோட்டை மலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. வெயில் காரணமாக காய்ந்த புற்களால் காட்டுத்தீ மளமளவென மலை முழுவதும் பரவியது. வனப்பகுதியில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடுகளும் தீயில் கருகி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.