திருச்செந்தூரில் அலைமோதிய கூட்டம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்... | Tiruchendur | Thanthi TV

x

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் தமிழ் மாதமான ஆனி மாதத்தின் கடைசி நாள் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

கடலில் குடும்பத்துடன் நீராடியதுடன் கடற்கரையை ஒட்டியுள்ள நாழி கிணற்றிலும் பக்தர்கள் வரிசையில் நின்று குளித்தனர். அதன் பின்னர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்