வயது துடிப்பில்.. கெத்து என நினைத்து செய்த செயல்.. இளைஞர்களுக்கு நடந்த சோகம் | Barricade

x

காரைக்காலில் பேரிகார்டை சாலையில் தரதரவென இழுத்து சென்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

காரைக்கால் கடற்கரை சாலையில், இளைஞர்கள் இருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், பேரிகார்டை சாலையில் இழுத்து சென்று பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தனர். மேலும், கெத்து காட்டுவதாக நினைத்து கொண்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர். இந்நிலையில் வீடியோ வேகமாக வலம் வர வழக்குபதிந்த காரைக்கால் போலீசார், இளைஞர்களை தேடி வந்தனர். தொடர்ந்து, திருநள்ளாறு பகுதியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் அப்துல் ரகுமான் என்ற இருவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்