நள்ளிரவில் சென்னையில் சைலெண்டாக வேலையை காட்டிய மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பெய்த மழையால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, திருவல்லிக்கேணி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்..
