ஆபாச நடிகைக்கு ரூ.1 கோடி... கைதாகும் சூழலில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் - "அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன்முறை..."

x

76 வயது ட்ரம்ப், ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடனான பாலியல் தொடர்பை மறைக்க அவருக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. 2016 தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து அப்பணம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டை மன்ஹாட்டன் நீதிமன்றம் முன்வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒருவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுவது இதுவே முதன்முறை... மேலும் கைதைத் தவிர்க்க ட்ரம்ப் தானே வந்து சரணடைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன...Next Story

மேலும் செய்திகள்