"ரேஷன் அரிசி வழங்கலில்.."புதுவையில் கிளம்பிய பரபரப்பு குற்றச்சாட்டு’
புதுச்சேரியில் விலையில்லா ரேசன் அரிசி வழங்கும் டெண்டரில், அரசு பல கோடி மோசடி செய்துள்ளதாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ரேசன் அரிசி வழங்கும் டெண்டர் வடநாட்டு கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும். உள்ளூர் அரிசி மில்கள் இதில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முறைகேடான இந்த டெண்டரை ரத்து செய்துவிட்டு, சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் டெண்டரை திருத்தம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Next Story
