திருப்பதியில் ஒரே நாளில் கோடிகளில் கொட்டிய உண்டியல் காணிக்கை..!

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தரிசனத்திற்காக கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, நேற்று ஒரே நாளில் 69 ஆயிரத்து 211 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக மட்டும் 5 கோடியே 11 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்