கிருஷ்ணகிரியில் சிரித்த முகத்துடன் கேக் வெட்டி குதூகலம்... கட்டிப்பிடித்து அடித்து விளையாடிய சக நண்பர்கள் - திடீரென சரிந்து விழுந்து... - வெளியான அதிர்ச்சி தகவல்கள்

x
  • சென்னையைச் சேர்ந்த சபீக் அஹமத், கிருஷ்ணகிரியில் தங்கி, அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.
  • கடந்த 10ம் தேதி, சபீக் அகமதுவுக்கு பிறந்தநாள் என்பதால், அவரது விடுதிக்கு சென்ற நண்பர்கள், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • நண்பனின் பிறந்த நாள் என்பதால், சபீக் அகமதுவை கட்டியணைத்தும், அடித்தும் பிடித்தும் முரட்டுத்தனமாக கொண்டாடியுள்ளனர் அவரது நண்பர்கள்.
  • அப்போது, என்ன ஆனது என்றே தெரியவில்லை... சிரித்த முகத்துடன் குதூகலமாக இருந்த சபீக் அகமது, திடீரென கீழே சரிந்து விழுந்தது சக நண்பர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
  • சுயநினைவின்றி கிடந்த சபீக் அகமது, நீண்ட நேரம் ஆகியும் எழுந்து வராததால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அவரது நண்பர்கள்.
  • அங்கு மருத்துவர்கள் சபீக் அகமதுவை பரிசோதித்த போது, கழுத்துப் பகுதியிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பு அறுந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மாணவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டபோதிலும், சுயநினைவு திரும்பவில்லை.
  • இந்த சம்பவம் தொடர்பாக, குருபரப்பள்ளி போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், வழக்குப்பதிவு எதுவும் இதுவரை பதிவு செய்யவில்லை. அதேபோல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  • இதன் முதற்கட்ட விசாரணை அடிப்படையில், 4 மாணவர்கள் 3 மாதத்திற்கு கல்லூரிக்கு வர தடை விதித்து, தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
  • பாதுகாப்பு மிகுந்த அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியில், பிறந்தநாள் கொண்டாட அனுமதி வழங்கியது யார்? அதிகாரிகளின் அலட்சியமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
  • விளையாட்டு விபரீதம் ஆகும் என்பதற்கு ஏற்ப பிறந்தநாள் கொண்டாடிய மாணவனே கோமாவிற்கு சென்றது, பெற்றோரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்