கோயில் நிலத்தை ஆக்கிரமித்ததால் கோபத்தில் சுவரை இடித்து தள்ளிய பெண்கள்! - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

x
  • சூளகிரி அருகே கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு. 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கடப்பாரை கொண்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளினர்
  • கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த நல்லகானகொத்தப்ள்ளி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
  • இந்த கிராமத்தில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
  • இந்த மாரியம்மன் கோவில் எதிரே 10 செண்ட் நிலம் கோவிலுக்கு சொந்தம் எனவும் அந்த வழி நீண்ட காலமாக பொதுமக்களின் பொது பாதையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில் கோவில் எதிரே உள்ள 10 செண்ட் நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து சுற்று சுவர் கட்டியுள்ளனர்.
  • இந்த நிலையில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
  • இந்த நிலையில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்தை கண்டு ஆத்திரமடைந்த
  • கிராம பெண்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் கோவில் முன்பு அமைப்பட்டிருந்த சுற்றுச்சுவரை கடப்பாரை வைத்து இடித்து தள்ளினர்.
  • கோவில் நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுசுவர் அமைத்தது..
  • இதனை எதிர்த்து கிராம பெண்கள் கடப்பாரை வைத்து சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய சம்பவத்தால் இப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்