உணவு கூட கொடுக்காமல், இரக்கமில்லாமல் 12 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தாயின் இரண்டாவது கணவன் - கேரளாவில் அதிர்ச்சி

உணவு கூட கொடுக்காமல், இரக்கமில்லாமல் 12 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தாயின் இரண்டாவது கணவன் - கேரளாவில் அதிர்ச்சி
Published on
• கேரளா மாநிலம் ஆலாப்புழா மாவட்டத்திலுள்ள மாவேலிக்கரையை சேர்ந்தவர் 12 வயது சிறுவன். • இவர் உடலில் பலத்த காயங்களுடன் இருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுவனை மருத்துவமனையில் அனுமதிக்க கோரி வற்புறுத்தியுள்ளனர். • இல்லையெனில் போலீசில் புகாரளிப்பதாக மிரட்டியதை தொடர்ந்து சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். • அப்போது, சிறுவனின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதை கண்ட மருத்துவர்கள், சிறுவனின் தாயிடமும், அவரின் இரண்டாவது கணவனிடமும் விசாரணை நடத்தினர். • விசாரணையில், இருவரும் முன்னுக்குபின் முரணான தகவல்களை அளித்த நிலையில், சிறுவனுக்கு போதிய உணவு வழங்காமல் இருவரும் கொடூரமாக தாக்கியது அம்பலமானது. • இதையடுத்து, புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனின் வளர்ப்பு தந்தையான சுகுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
X

Thanthi TV
www.thanthitv.com