ராணுவ வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல் - 5 வீரர்கள் உயிரிழப்பு-காஷ்மீரில் பரபரப்பு..!

x

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் ராஜோரி செக்டாரில் சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் மாலை 3 மணியளவில் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர். ராணுவ வாகனத்தை குறிவைத்து துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகள், கையெறி குண்டையும் வீசியிருக்கிறார்கள். இதில் வாகனம் பற்றி எரிந்த தகவல் அறிந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீயை அணைத்தனர். மழை, தெளிவற்ற வானிலையை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த ஒரு வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி தொடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்