"யார பாத்து ஹாரன்அடிக்கிற?" -காங்கேயத்தில் அரசு பஸ்ஸை நடுரோட்டில் டிரைவரை சரமாரியாக அடித்த இளைஞர்கள்

x

ஈரோட்டில் இருந்து பழனிக்கு சென்ற அரசு பேருந்தை மேகநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்தநிலையில் அரச்சலூர் அருகே இளைஞர்கள் சிலர் போதையில் பேருந்திற்கு வழிவிடாமல் சென்றதாகவும், எனவே மேகநாதன் ஹாரன் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து காங்கேயத்தில் பேருந்தை வழிமறித்த இளைஞர்கள், மேகநாதனை பேருந்தில் இருந்து இறக்கியதோடு, எங்களை பார்த்து ஹாரன் அடிக்கிறாயா என கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேகநாதன் போலீசாரிடம் புகாரளித்துள்ள நிலையில், மேகநாதன் தாக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்