இளைஞருடன் ஏற்பட்ட தகராறு... புதுமாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை - அரியலூரில் பயங்கரம்

x

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முன்விரோதம் காரணமாக புதுமாப்பிள்ளையை இளைஞர் கத்தியால் வெட்டிய சம்பவம், கொலை வழக்காக மாறி உள்ளது. தழுதாழை பகுதியை சேர்ந்த பவித்ரனுக்கு, கடந்த ஜனவரி 27ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஜெயமணி என்பவருடன் ஏற்பட்ட முன்விரோத தகராறில், பவித்ரன் கத்தியால் வெட்டப்பட்டார். தடுக்க வந்த பவித்ரனின் தந்தையும் இதில் காயமடைந்தார். இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு பவித்ரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து ஜெயமணியை கைது செய்த போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்