18 மாத பெண் குழந்தையை கடித்து குதறி கொன்ற தெரு நாய்கள் - தலையில் அடித்து கதறிய தாய்..!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மெட்டவலச கிராமத்தை சேர்ந்த 18 மாத குழந்தை, தன் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் திடீரென சிறுமியை சூழ்ந்து கடித்து குதறின. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தையின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவரின் தாய் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக கதறி அழுத காட்சி பார்ப்போரை கலங்க வைத்தது...

X

Thanthi TV
www.thanthitv.com