கனிமொழி எம்.பி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறல் - திமுக பிரமுகர்கள் 2 பேர் கைது

x

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய இரண்டு திமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் கடந்த மாதம் திமுக சார்பில் கனிமொழி எம்பி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுக இளைஞரணியை சேர்ந்த இருவர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, திமுகவினர் மீது பெண் காவலர் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கோயம்பேடு துணை ஆணையர் குமார் நடத்திய விசாரணையின்போது, போதையில் தெரியாமல் கைபட்டதாக திமுகவினர் கூறியதால், புகாரை, பெண் காவலர் வாபஸ் பெற்றதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, சசிகலா, பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திய போலீசார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த பிரவீன் மற்றும் ஏகாம்பரம் ஆகிய இருவரையும் தற்போது கைது செய்துள்ளனர். அவர்கள் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்