இன்னும் 6ஆண்டுகளில்...95 அடி உயரத்தில்..பெரியாரின் பிரம்மாண்ட சிலை... திருச்சியில் "பெரியார் உலகம்" வளாகம்

x

திருச்சி, சிறுகனூர் கிராமத்தில் 30 ஏக்கர் பரப்பில் அமைக்கப் படுகிறது, "பெரியார் உலகம்" வளாகம். இந்த இடம், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து, 32 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

பெரியாரைப் பற்றிய ஆய்வுகள், பெரியார் பயிலரங்கம், பெரியாரின் கொள்கைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்கான முன்னெடுப்புகள் என, பிரம்மாண்டமாக அமைக்கப்படுகிறது, பெரியார் உலகம்.

இந்த வளாகத்தின் முகப்பில்,155 அடியில் மிகப் பெரும் பெரியார் சிலை அமைக்கப்படுகிறது. இந்த சிலையின் பீடம் மட்டும் 60 அடிகள் இருக்கும் என்றும், பெரியார் 95 வரை வாழ்ந்தார் என்பதைக் குறிக்கும்படியாக, 95 அடி உயர சிலை உருவாக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலை உருவாக்கும் பணி மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு வெளிநாடுகளைச் சேர்ந்த வல்லுநர்களின் பங்கேற்புடன் இந்தச் சிலை உருவாக்கப்படுகிறது.

மணிக்கு 330 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசினாலும், சிலைக்கு சிறு சேதம்கூட ஏற்படாத அளவுக்கு வடிவமைக்கப்படுகிறது என்றும், பூகம்பம் ஏற்பட்டாலும் சிலைக்கு எந்த பாதிப்பும் நேராது என்றும் கூறுகிறார், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்புராஜ்.


Next Story

மேலும் செய்திகள்