“24 மணி நேரத்தில்...“ - இந்தியாவின் கொரோனா நிலவரம்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து

11 ஆயிரத்து 47 பேர் குணமாகி உள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4.43 கோடியாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றுக்கு 28 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 98.69 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தற்போது 53 ஆயிரத்து 852 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா சோதனைகளில், தினசரி நோய் உறுதி விகிதம்

3.62 சதவீதமாகவும், வாரந்திர நோய் உறுதி விகிதம் 5.11 சதவீதமாகவும் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2.08 லட்சம் பேரிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 220.66 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com