தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் 20 ஆம் தேதி முதல் வரும் மே 18 வரை rte.tn schools.gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில்,

தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் மே 29ஆம் தேதிக்குள் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 8000 தனியார் பள்ளிகளில் 83 ஆயிரம் இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com