சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு -இன்று முதல் சிறப்பு பேருந்துகள் | sabarimala

x

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு, இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்கு தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்ல ஏதுவாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று 17ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை, சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கு முன்னதாக, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்