அதிகரித்து வரும் உலகளாவிய மந்தநிலை... 3 %க்கும் கீழ் உலகப் பொருளாதார வளர்ச்சி - எச்சரிக்கை விடுத்த IMF தலைவர்

x

2023இல் உலகப் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ்தாலினா ஜார்கீவா கூறியுள்ளார். இந்த வளர்ச்சியில் 50 சதவீத பங்களிப்பை இந்தியாவும், சீனாவும் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புகள் மற்றும் உக்ரைன் போரின் விளைவாக கடந்த ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி வேகம் வெகுவாக குறைந்திருந்தது. இந்த போக்கு இந்த ஆண்டும் தொடரும் என்றார். 2021இல் 6.1 சதவீதமாக இருந்த உலகப் பொருளாதார வளர்ச்சி, 2022இல் 3.௪ சதவீதமாக பாதியாக குறைந்துள்ளதை சுட்டிக் காட்டினார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உலகப் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாகவே தொடரும் என்று எச்சரித்துள்ளார். இது குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்