டாப் 10 படங்களின் IMDb பட்டியல்... ராக்கி பாய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த 'கே.ஜி.எஃப் 2' 3வது இடம்

டாப் 10 படங்களின் IMDb பட்டியல்... ராக்கி பாய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த 'கே.ஜி.எஃப் 2' 3வது இடம்
Published on

இந்த பட்டியலில், ராஜமவுலி இயக்கத்தில், விருதுகளை வாங்கிக் குவித்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான, 'தி காஷ்மீர் பைல்ஸ்' இரண்டாம் இடம் பிடித்துள்ள நிலையில், திரையரங்குகளில் ராக்கி பாய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த 'கே.ஜி.எஃப் 2' மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி, வசூலை வாரிக் குவித்த 'விக்ரம்' 4வது இடத்தை கைப்பற்றிய நிலையில், கன்னடத்தில் உருவாகி பெரிதும் பாராட்டப்பட்ட 'காந்தாரா' படம், இந்த பட்டியலில் 5வது இடத்தை பதிய வைத்தது.

கல்கி காதலர்களின் 'பொன்னியின் செல்வன்' 9வது இடத்தை தனதாக்கி கொண்ட நிலையில், மாதவன் நடிப்பில் வெளியான 'ராக்கெட்ரி', துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்', கன்னடத்தில் வெளியான '777 சார்லி' ஆகிய படங்களும் தடம் பதித்துள்ளன.

இதனால் டாப் 10 பட்டியலில், தென் இந்தியாவில் உருவான 8 படங்கள் இடம் பிடித்து தெறிக்க விட்டிருக்கின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com