"நான் ஒரு ஐஏஎஸ்; அரசு வேலையெல்லாம் அசால்ட்டு" - காதில் பூ சுற்றி கோடிக்கணக்கில் சீட்டிங்...

x

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட போலி ஐஏஎஸ் அதிகாரியின் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.

சேலம் தாரமங்கலத்தை சேர்ந்த அரவிந்த்குமார் என்பவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவிடம் புகார் மனு அளித்திருந்தார். மளிகை கடை நடத்தி வரும் தன் தந்தையிடம், செவ்வாய் பேட்டையை சேர்ந்த நடராஜன் என்பவர் பழக்கமானதாகவும், அவர் வாயிலாக சசிக்குமார் என்பவர் அறிமுகம் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். தன்னை ஐஏஎஸ் அதிகாரி என கூறிக் கொண்ட சசிக்குமார், அரவிந்த்குமாரின் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து அரசு வேலை வாங்கித் தருவதாக 2 கோடியே 83 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சசிக்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சசிக்குமார் ஏற்கனவே 70 லட்ச ரூபாய் பண மோசடி வழக்கில் சிறையில் உள்ள நிலையில் அவரை மீண்டும் இந்த வழக்கில் கைது செய்தனர். மேலும் சசிக்குமாரின் கூட்டாளியான முகமது இஸ்மாயிலையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்