மின்னொளியில் ஜொலிக்கும் தேவாலயங்கள் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் | Chirstmas Celebration

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில், சிறப்பு திருப்பலி, ஆராதனை நடைபெற்றது. கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ், சிறப்பு திருப்பலியை தொடக்கி வைத்து, குழந்தை ஏசு பிறப்பை அறிவித்தார். குழந்தை ஏசு பொம்மையை குடிலில் வைத்த பிறகு, ஆராதனைகள் மற்றும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டன. இதில், கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஒற்றுமை, ஆரோக்கியம், மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தி பிரார்த்தனை நடைபெற்றதாக, ஆயர் தாமஸ் ஆக்வினஸ் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com