திருமணமான 10 நாளில் புதுமணப் பெண் ஓட்டம் - இளைஞரின் வீட்டை அடித்து நொறுக்கிய பெண்ணின் தந்தை

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, திருமணமான 10 நாளில், பக்கத்து வீட்டு இளைஞருடன் புதுமணப் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த பூர்ணிமாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் இடையே, கடந்த 10 நாட்களுக்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில், புது மணப்பெண் பூர்ணிமா, பக்கத்து வீட்டைச் சேர்ந்த அஜித்குமார் என்பவருடன், வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பூர்ணிமாவின் தந்தை மாணிக்கம், தனது உறவினர்களுடன், அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று, அங்கு நின்றிருந்த மினி டெம்போவை தீவைத்து எரித்துள்ளனர். மேலும், அருகிலிருந்து வைக்கோல்போருக்கும் தீவைக்கப்பட்டது. இதுதொடர்பாக அஜித்குமாரின் தந்தை அளித்த புகாரின் பேரில், மாணிக்கம், அவரது உறவினர்கள் சுப்பிரமணி, கணபதி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், பூர்ணிமாவும், அஜித்குமாரும் ஏற்கனவே காதலித்து வந்ததாகவும், இவர்களின் காதலை ஏற்காத பூர்ணிமாவின் குடும்பத்தினர், வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்