"கள்ளத்தனமாக மது விற்பனை".. சமூக ஆர்வலர் vs ஊழியர்கள்- போட்டி போட்டு சாலையில் படுத்து போராட்டம்

x

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கள்ளத்தனமாக மது விற்பதை தடுக்க வலியுறுத்தி பொதுநல ஆர்வலர் சாலை நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றார். பார் அருகில் சில ஊழியர்கள் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டனர். இதனைக் கண்ட பொதுநல ஆர்வலர் கனகராஜ் என்பவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதை அறிந்த பார் உரிமையாளர் முருகேசன் என்பவர் கனகராஜை மிரட்டியுள்ளார். ஆத்திரமடைந்த கனகராஜ், குமாரபாளையம் - பள்ளிபாளையம் சாலையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு போட்டியாக, பாரில் கள்ளதனமாக மது விற்பனை செய்த ஊழியர்களும் சாலையில் படுத்து உறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்