சட்ட விரோதமாக குழந்தை தத்தெடுப்பு... போலி பிறப்புச் சான்றிதழ் வழங்கிய அலுவலர்

x

கேரள மாநிலம், திருப்புனித்துறையைச் சேர்ந்த அனுப், சுனிதா தம்பதி, சட்டவிரோதாக ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளனர்.

அந்த குழந்தைக்கு எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக நிர்வாக உதவியாளரான பணியாற்றும் அனில் குமார் என்பவர் போலிச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து நகராட்சி ஊழியர் ரஹானா அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

அனுப், சுனிதா தம்பதி தலைமறைவாக இருந்த நிலையில், அந்தக் குழந்தையை குழந்தைகள் நலக் குழு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அந்தக் குழந்தையின் உண்மையான பெற்றோரைக் கண்டுபிடிக்குமாறு போலீசாருக்கு குழந்தைகள் நலக்குழு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்