இந்தியாவுக்கு என பிரத்யேக மொபைல் ஆப்ரேடிங் சிஸ்டம் - BharOS-யை உருவாக்கியது சென்னை ஐ.ஐ.டி

இந்தியாவுக்கு என பிரத்யேக மொபைல் ஆப்ரேடிங் சிஸ்டம் - BharOS-யை உருவாக்கியது சென்னை ஐ.ஐ.டி
x

இந்தியாவுக்கு என பிரத்யேக மொபைல் ஆப்ரேடிங் சிஸ்டமாக BharOS-யை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஒ.எஸ்.க்கு போட்டியாக IndOS எனப்படும் புதிய இயங்குதளத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சென்னை ஐஐடி மேட் இன் இந்தியா திட்டமாக BharOS என்ற மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளது. இப்போதைக்கு ரகசிய தகவகல்களை பாதுகாக்கும் கடுமையான தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தேவைகளை கொண்ட நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 100 கோடி மொபைல் போன் பயனர்களுக்கு பயனளிக்கும் வகையிலான இந்த இயங்குதளம், பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனளார்கள் தங்களுக்கு தேவையான செயலிகளை மட்டும் இந்த இயங்குதளத்தில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.






Next Story

மேலும் செய்திகள்