"சட்டவிரோதமாக மது விற்றால்.." - காவல் ஆணையர் அதிரடி

x

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா தெரிவித்துள்ளார். திருச்சி மன்னார்புரத்தில், ரோந்து போலீசாரின் சட்டையில் பொருத்தப்படும் கேமரா வழங்கும் நிகழ்வில் காவல் ஆணையர் சத்தியபிரியா கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மற்றும் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்