"இனி இப்படி நடந்தால்.. இணைய சேவை கிடையாது"

x

இந்தியாவில் இணைய சேவை முடக்கம் அதிகரித்து வருவதாக தகவல் ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. இணைய முடக்கத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....

நாட்டின் எந்த மூலையில் எது நடந்தாலும் அடுத்த நொடி அது இணையத்தில் பதிவு செய்யப்பட்டு உலகம் முழுக்க கொண்டு சேர்க்கப்படுகிறது. அந்தளவுக்கு இணையம் சாமானிய மக்கள் வாழ்க்கையோடு இரண்டறக்கலந்து விட்டது.

ஆக்கப்பூர்வமான தகவல்கள் குவிந்துகிடக்கும் இணைய தலங்களில், சம அளவில் விரும்பத்தகாத தவறான செய்தி களும் கொட்டிக்கிடக்கின்றன.

பல நேரங்களில் பொய்யான தகவல்கள் வேகமாக பரவி மக்கள் மத்தியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதுபோன்ற நேரங்களில் பிரச்சினையை கட்டுப்படுத்த இணைய சேவை முடக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் இணைய சேவை முடக்கம் அதிகரித்துள்ளதாக இணைய சுதந்திர சம்மேளனம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட இணைய சேவை முடக்கம் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

போராட்டங்கள் மற்றும் இனமோதல்களை தடுக்கவும், வதந்திகள் பரவுவதை தடு்க்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் வரும்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவும் இணைய சேவை முடக்கம் அமல் படுத்தப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள 18 மாநிலங் களிலும் ஒரு முறையாவது சட்டம் ஒழுங்கு பிரச்சினை, ஜாதிய பிரச்சினை காரணமாக இணைய சேவை முடக்கப்பட்டிருக்கிறது என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ளூர் அளவிலான போராட்டங்களுக்காக 54 முறை இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபடியாக கடந்த 3 வருடங்களில் 85 முறை இணைய சேவை முடக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் இணையசேவையை முடக்குவதற்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1973, இந்திய டெலிகிராப் சட்டம் 1885 மற்றும் தொலை தொடர்பு சேவைகளின் தற்காலிக இடைநீக்க விதிகள் பயன்படுத்தப்படுகின்றன.

காஷ்மீரில் நடந்த நீண்ட கால முடக்கம் தான் இந்தியாவில் நடந்த நீண்ட இணைய சேவை முடக்கம் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்புக்காக, வதந்திகள் பரவாமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது. இணைய முடக்கத்தால் பிரச்னைகளுக்கான முடிவுகள் எட்டப்படு வதில்லை என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால், இணையப்பயன்பாடு என்பது அடிப்படை மனித உரிமை எனவும் சேவையை முடக்குவது மனித உரிமை மீறல் என்றும் க்கூறுகிறது ஐநா.

இணையதலங்களில் வெளியாகும் வதந்திகளை கட்டுப்படுத்த ஏராளமான வழிமுறைகள் உள்ளநிலையில், அதை முன்னெடுக்காமல் இணைய சேவையை முடக்குவது சரியான தீர்வை தராது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..


Next Story

மேலும் செய்திகள்