"இப்படியே சென்றால் இந்தியாவில் அதிபர் ஆட்சிதான்" - மம்தா ஆவேச பேச்சு | Mamata Banerjee | India

x

"இப்படியே சென்றால் இந்தியாவில் அதிபர் ஆட்சிதான்" - மம்தா ஆவேச பேச்சு | Mamata Banerjee | India

இந்தியாவில் ஜனநாயக அமைப்புகளை முடக்கும் போக்கு தொடர்ந்தால், நாடு அதிபர் ஆட்சிக்கு செல்ல வழிவகை செய்யும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள தேசிய நீதியியல் அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் முன்னிலையில் மம்தா பானர்ஜி பேசினார். இப்போது நாட்டில் ஜனநாயக அமைப்புகள் முடக்கப்படுவதாக கவலையை தெரிவித்த மம்தா பானர்ஜி, இந்த போக்கு தொடர்வது நாடு அதிபர் ஆட்சியின் கீழ் வர வழிவகை செய்யும் என எச்சரித்தார். நாட்டின் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இந்திய தலைமை நீதிபதிக்கு கோரிக்கையையும் விடுத்தார். சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் அனைத்து ஜனநாயக அதிகாரமும் கைப்பற்றப்படுவதாக குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, card 6 ஜனநாயகம் எங்கே? தயவு செய்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் தலைமை நீதிபதியிடம் கோரிக்கையை விடுத்தார். card 7 தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல விஷயங்கள் நடக்கிறது என குறிப்பிட்டவர், card 8 இதை குறிப்பிடுவதற்கு நான் வருந்துவதாகவும், தவறாக இருந்தால் மன்னிக்கவும் என நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்