இரவில் ஆண்கள் பாலியல் அத்துமீறினால்..பெண்களை காக்கும் 'இரும்புக் கை மாயாவி' - சைக்கோக்களுக்கு Red அலர்ட் தரும் Blue பாக்ஸ்..!

x

பெங்களூரில் பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சேஃப்டி ஐலாண்டு எனும் இயந்திரம் மக்களிடையே தனிக்கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....

இந்தியாவின் முக்கிய தொழில் நகரங்களான பெங்களூருவில் ஏராளமான தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் கல்வி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, வெளிநாட்டு ஐடி கம்பெணிகள் என்பதால் இரவு நேரங்களிலும் பெங்களூர் நகரம் பரபரப்பாகவே காணப்படும்.

இப்படி, பணி, படிப்பு, பிசினஸ் என இரவு பகலாக பிசி நகரமாக இருக்கும் பெங்களூரில் குற்றங்களுக்கும் குறைவில்லை.

இதனை நிரூபிக்கும் விதமாக, முந்தைய ஆண்டுகளை விட 2022ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக கடந்த ஜனவரி மாதம் பெங்களூர் ஆணையர் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க பெங்களூரு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருப்பதால், நகரத்தை முழுவதுமாக கண்காணித்து நிர்வாகிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக தொழில்நுட்ப உதவியுடன் கைக்கோர்த்துள்ளது பெங்களூர் போலீஸ்.

பெண்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், ஐடி பார்க்குகள், பதற்றமான இடங்களில், சேஃப்டி ஐலாண்டு எனும் பாதுகாப்பு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சுமார் 6 அடிக்கு மேல் நீல நிறத்தில் இருக்கும் இந்த சேஃப்டி ஐலாண்டு இயந்திரம், ஆபத்தில் இருப்பவர்கள் போலீசாருடன் எளிதில் தொடர்பு கொள்ள ஏற்றவாரு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் செல்போனை உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருந்தாலோ, அல்லது வழிபறி கொள்ளை போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள சேஃப்டி ஐலாண்டு இயந்திரத்தை அணுகலாம்.

இந்த நீல நிற இயந்திரத்தில் உள்ள எஸ்.ஓ.எஸ் சிகப்பு பட்டனை அழுத்தினால், காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கமண்டோ சென்டருக்கு பாதிக்கப்பட்டவரின் அருகில் உள்ள சிசிடிவி காட்சியுடன் அலாரம் அடிக்கும்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும்...

பெங்களூர் நகரம் முழுவதும் 30 இடங்களில் இந்த சேஃப்டி ஐலாண்டு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றச்சம்பவங்கள் தடுக்கப்பட்டு...பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்