"வயநாட்டிற்கு இடைத்தேர்தல் வந்தால்" - அடித்து சொல்லும் காங். எம்பி கார்த்தி சிதம்பரம்

x

கர்நாடகா தேர்தலின் போது வயநாடு மக்களவை தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸார் சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர் ஊட்டி கனேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்