"சட்டமன்றத்தில என்னை திட்டு.. அப்பதான் பணம் தருவாங்க.." எம்எல்ஏவுக்கு அமைச்சர் நேரு தந்த ஐடியா..!

x

மழைநீர் செல்வதற்கு கால்வாய் கட்டி தர வேண்டுமென கோரிக்கை விடுத்த எம்.எல்.ஏ.வுக்கு, சட்டமன்றத்தில் என்னை நீ திட்டு அப்போது நிதி கிடைக்கும் என அமைச்சர் கே.என்.நேரு ஐடியா கொடுத்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது. சென்னை மாங்காட்டில் மழைநீர் பாதித்த பகுதிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சரிடம் பேசிய செல்வபெருந்தகை, மழை நீர் செல்ல தங்கள் பகுதிக்கு பெரிய கால்வாய் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர், சட்டமன்றத்தில் நீ என்னை திட்டு, நான் அதற்கு பதிலளிக்கிறேன். அப்போது தான் நிதி கிடைக்கும் என்றார். அமைச்சரின் இந்த பதிலை கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்