ஆடவர் டி20ல் அசத்திய கோலி - மகளிர் டி20ல் மிரட்டிய ஜெமிமா... கோலி, ஜெமிமாவை ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட ஐசிசி

x

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்து வெற்றிக்கு வழிவகுத்த நிலையில், விராட் கோலி மற்றும் ஜெமிமாவின் இன்னிங்சை ஒப்பிட்டு ஐசிசி வீடியோ வெளியிட்டு உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதேபோல், தற்போது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்நிலையில், இருவரும் ஒரே விதமாக ஆடிய ஷாட்களை ஐசிசி பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்