ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் - ஆஸி.யை பின்னுக்குத்தள்ளிய இந்தியா

x

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 115 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து, இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த‌தால், 113 புள்ளிகளாக குறைந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன்மூலம், 113 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த இங்கிலாந்து, முதல் இடத்திற்கு முன்னேறியது. 111 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்த இந்தியா, 113 புள்ளிகளைப் பெற்று ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. 112 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 4வது இடத்திலும், 106 புள்ளிகளுடன் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்