ஒலிம்பிக்கில் கிரிக்கெட்..? ஐசிசியின் அதிகாரப்பூர்வ வெளியீடு

x

2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில், 6 அணிகள் மோதும் வகையிலான கிரிக்கெட் போட்டிகளை சேர்க்க ஐசிசி பரிந்துரைத்துள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளை சேர்க்க தொடர்ந்து முயற்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள லாஞ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில், தலா 6 ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் மோதும் போட்டிகளை சேர்க்க, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டு குழுவுக்கு ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்படும் பட்சத்தில், அவை இருபது ஓவர் போட்டிகளாக நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்