"நான் கையில் ரூபா வாங்கமாட்டான் ஆன்லைனில் அனுப்புங்க" - தனி பட்டா வழங்க லஞ்சம் கேட்ட விஏஓ.. வெளியான அதிர்ச்சி ஆடியோ

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலர், தனிப்பட்டா வழங்குவதற்காக, தொழில் அதிபரிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகியுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த தொழிலதிபர் சுபாஷூக்கு சொந்தமான இடம் ஆதிச்சநல்லூர் வருவாய் கிராமத்தில் உள்ளது. இந்த இடம் கூட்டு பட்டாவில் இருப்பதால் தனிப்பட்டா கேட்டு சுபாஷ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளார். இந்த நிலையில், ஆதிச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் கணேஷ் என்பவர், உரிய ஆவணங்கள் இருந்தும் தனிப்பட்டாவழங்க லஞ்சம் கேட்பதாக, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணனிடம் சுபாஷ் ஆடியோ ஆதாரத்துடன் புகார் மனுவை அளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com