"செக்ரட்ரியேட்ல வேல பார்க்குறேன்..ரூ.15 லட்சம் கடன் வாங்கித்தரேன்.." - மோசடி ஆசாமியை வளைத்த போலீசார்

x

நெல்லையில் தலைமை செயலக ஊழியர் என கூறி 15 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பொட்டல்குளத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தலைமை செயலகத்தில் பணிபுரிவதாகவும், மத்திய அரசு மூலம் 20 லட்ச ரூபாய் கடன் பெற்று தருவதாகவும் கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதற்காக, அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மூவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்த நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதனடிப்படையில், தலைமறைவான கார்த்திகேயனை தேடி வந்த போலீசார், அவரை கைது செய்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்