"ரூ.1000 தாங்க.. வீட்டுக்கே வந்திடுறேன்" இறப்பதற்கு முன் பெற்றோருக்கு போன் செய்து கதறி அழுத பெண்

x

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வந்த வடமாநில காதலர்களில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விஷால் கோபி - ஃபுல் மதி கோபி என்ற காதலர்களும், ஸ்ரீகாஸ் சமத் - சுகுமதி சுந்தி என்ற காதலர்களும் ஒரே அறையில் வசித்து வந்துள்ளனர்.

இதில் விஷால் கோபியும், ஸ்ரீகாஸ் சமத்தும் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஃபுல் மதி கோபி அவர்களுடைய பெற்றோருக்கு போன் செய்து தனக்கு விஷால் கோபியுடன் வாழ பிடிக்கவில்லை என்றும், தான் உங்களுடன் வந்து விடுகிறேன் எனக் கூறி போக்குவரத்திற்காக ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு அவரின் பெற்றோர் தர முடியாது என்றும், நீ அங்கையே இரு என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஃபுல் மதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தை வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்