"போட்டிக்கு முன் ரஹானேவிடம் ஒரே வார்த்தை தான் கூறினேன்.." - டோனி ஓபன் டாக்..!

x

சென்னை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே மீது நம்பிக்கை இருப்பதாக கேப்டன் தோனி கூறி உள்ளார். மும்பைக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேட்டியளித்த தோனி, சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியதாகப் பாராட்டினார். மஹாலா மற்றும் பிரிட்டோரியஸின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தாதாகக் கூறிய தோனி, துஷார் தேஷ்பாண்டேவிற்கு அதிக திறமை இருப்பதாகவும், நோ-பால் வீசுவதை தவிர்த்தால் அவரது திறமை மேலும் மேம்படும் என்றும் கூறினார். ரஹானேவை எந்த அழுத்தமும் இல்லாமல் ஜாலியாக விளையாடும்படி கூறியதாகவும் தோனி பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்